புதிதாகக் கவிபுனைந்த ஒருவருக்கு நான் சொல்ல விழைந்தது. ஒரு கவிதை வடிவில்.
ஒரு கவியாகத் தான்வரவேண்டும் --- சில
வரிபாடிப் புகழ்பெறவெண்டும் ---- என்று
குறியாகக் களம்கண்டநல்லார் -----நேரம்
சரியாகப் பயன்கொள்ளவேண்டும்.
தொடராகப் பலபாடல் பாடி ----- கவிக்
கடலாக உருவாதல் கூடும்--- எழுதல்
இடராகும் எனுமெண்ணம் கொண்டு --- விட்டு
விலகாத முனைப்பாற்றலுண்டேல்
அருங்கவிகள் பல்லோரின் வாழ்க்கை---தம்மில்
பெரும்பகுதி தெளிவாகக் காட்டும்---- உண்மை
அருங்கனியும் இதுவன்றி யாது? -- உணர்ந்தே
அடைவீரே வருங்கால ஏற்றம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.