anthasthu
அந்தஸ்து என்பது அயன்மொழிச் சொல். (Skrt) இது இறுதியில் ஒருவன் எப்படி தகுதிநிலை பெறுகின்றான் என்பதைக் காட்டுவதாகக் கூறுவர். எனவே ஒருவன் கடைசியில் எத்தகுதி அடைகிறான் என்பதைப் பொறுத்தே அவனது அந்தஸ்து தீர்மானிக்கப்படுகிறது என்பது கருத்து,
இதில், அந்தம் = இறுதி. ஸ்தா என்பது நிற்றல் பொருளது. ஸ்தாபன என்பதில் இந்த ஸ்தா உள்ளது.
இந்த அடிச்சொற்கள் மேலை நாட்டுச் சொற்களிலும் உள்ளன. ஆங்கிலத்தில் கூட, தொடர்புடைய சொற்கள் உள்ளன. அந்த - end. ஸ்த - stand
இதற்குத் தமிழ் மூலங்கள் உள்ளனவா?
தழுக்குதல் என்பது ஒரு பழந்தமிழ்ச் சொல். இது ஒருவன் வாழ்வில் வளம்பெற்று உயர்வதையும் குறிக்கும். இதன் அடிச்சோல் "தழு " என்பது.
[B][I]tazukku-tal - to flourish, prosper[/I][/B]
அம் என்பது அழகு குறிப்பது .
அம் + தழு + து = அந்தழுத்து > அந்தஸ்து .
இப்படியாக இச்சொல்லுக்கு தமிழ் மூலமும் .காணலாம்.
Here you need to note the ழு> ஸ் change. Compare:
அழுத்திவாரு - அழுத்திவாரம் - அஸ்திவாரம் Again: ழு> ஸ் change.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.