விநாயகர் பிற்காலத்தில் இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுள் என்று ஆய்வாளர்கள் கூறுவர். விநாயகன் என்ற சொல்லும் வி+ நாயகன் என்று பிரிக்கப்பட்டு, சமஸ்கிருதச் சொல் என்று சொல்லப்படும்.
இனித் தமிழிலும் இதற்குப் பொருள் கூறுவதுண்டு,
வினை + ஆயகன், அதாவது வினைகளை ஆய்ந்து அவற்றை ஒதுக்குபவன் என்பதாம். வினை என்பதில் உள்ள "ஐ" கெட்டுப் புணர்ந்ததென்பர். ஆய் = ஆய்தல். அகம் - அகன்.
ஆயகன் - ஆய் அகன் : இது வினைத்தொகை.
இனி வி நாயகன் என்று பிரித்துப் பொருள் கண்டாலும் வி என்பது விழுமிய என்பதன் குறுக்கமே. நாயக என்பது நயத்தல் (விரும்புதல் ) என்பதனடியாகப் பிறந்த சொல்லே என்பதுண்டு . இதற்கு விளக்கம் தேவைப்பட்டால் எழுதுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.