Pages

புதன், 12 அக்டோபர், 2011

pleasures from poems

கடின நடையில் வரு கவிதை -- தமிழ்க்
காதல் உடையவர்க்குத்
தென்றல் தரு பொதிகை!

மெதுவு நிலையில் எழு பாடல் -- எளிமை
மேவிக் கவர்ச்சிதரும்
மேலும் முயற்சி அறும்

எளிய தமிழ்க்குரைகள் வேண்டா - கதலிக்
கனியை உரித்துணவே
இனிமை மிகுந்துவரும்!

கடினக் கவிதை மாதுளையே -- ஓடும்
உடைந்த கத்துத்தரும்
சுளைமி குத்தினிமை.

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. கடினக் கவிதை மாதுளையே -- ஓடும்
    உடைந்த கத்துத்தரும்
    சுளைமி குத்தினிமை.

    கடின நடையிலான கவிதையை மாதுளம் பழத்திற்கு ஒப்பிடலாம்.

    ஓடு(ம்) உடைந்து, அகத்துச் சுளை, இனிமை மிகுத்துத் தரும். (என்று முறைமாற்றிப் பொருளுணர்க.)

    பதிலளிநீக்கு

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.