பாவம் கழுதை பளுதூக்கும் நோவதனால்
ஆவ தறியாமல் கீழ்விழுந்து --- கேவிப்
புரண்டெழுந்து கத்துமோ போம்கதி எண்ணி
மிரண்டநிலை மீளுமோ தான்.
This was a response to Mr Chinnakannan wrote:
Quote Originally Posted by chinnakkannan View Post
உடல் வலி தான்.. குப்பை கூளங்களில் கழுதை புரண்டுபார்த்ததில்லை..வைகை ஆற்று மணல் வெளியில் புரண்டு பார்த்திருக்கிறேன்.. கூடவே இலவசமாய் இனிய கானமும் இசைக்கும்..!
.
முன் இடுகையில் உள்ள பாவின் இறுதியடி:
பதிலளிநீக்கு"மிரண்டநிலை மீளுமோ தான்!"
இஃது இரு பொருள்பட வருகிறது.
மிரண்ட நிலையினின்று கழுதை மீளுமோ? என்பது ஒரு பொருள்.
மிரண்ட நிலையே மீண்டும் வருமோ -- இது இரண்டாவது பொருள்.
மிரண்ட நிலையிலிருந்து கழுதை இப்போது மீண்டாலும் அந்த நிலை அதற்கு மீண்டும் வரக்கூடியதுதானே?
மிரண்ட நிலையிலிருந்து கழுதை மீளுமோ - மீளாது என்பதும் பொருத்தமாகவே உள்ளது.
இரு பொருளும் பொருந்தி வரும் அடி இதுவாகும்.