ஈனத்துள் வீழ்ந்தவன் ப..யன் - இங்கே
இனிஒரு வாழ்விலை என்றழும் குறையன்;
வானத்துள் தூக்கினன் இறைவன் -- அருள்
வைப்பகம் வைத்தனன் நந்தனை, அறைவீர்!
பாவத்தில் ஆழ்குழிப் பாணர் -- குலப்
பாழ்வழித் தோன்றலை, வாழ்கலை வாணன்
தேயத்தில் யாரும்கொண் டேத்த -- அருள்
தேட்டத்தை ஏற்றுப்பொன் தோட்டத்தில் சேர்த்தான்.
இறைவனும் ஏற்றார் இவர்கள் -- இங்கு
இணையறு பற்றினுக் கிருக்குமோ சுவர்கள்?
குறைதலும் இலாச்சுவை தொடர்வீர் --- என்றும்
கோடுதல் இலாமொழி கொண்டணி படர்வீர்
வாழ்கலைவாணன் = திருமால்; இறைவன். தேட்டம்= சம்பாதிப்பு. பொன் தோட்டம் = சுவர்க்கம். குறைதலும் = குறைவதும் முற்றும் இலாதொழிதலும் உள்ளடங்க, உம்மை வந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.