Post subject: mAmpazaththu vaNdu
உணவுக்குள்ளேயே குடியிருக்கிறேன்
உம்மைப்போல் வெளியுலகை
நான் அறிந்ததில்லை!
அறிந்து மகிழத்தான் உங்கள் உலகில்
என்ன இருக்குமோ?
என் உணவுலகம்
எனக்குப் போதும்!
என் உணவுக் கோளத்தை
யார் வெட்டிப்பார்த்தாலும்
என்னோடு என் உணவையும்
வீசி விடுவார்கள்.
ஆனாலும்
மாம்பழத்து வண்டென்று
மதிப்பில் எனக்குக் குறைவில்லை.
என்னைப் படைத்தவன்
என்னையும் காக்கின்றான்.
=================
difficulty with reading fonts
பழுத்த அறிவினராம் பாவலர் பல்லோர்
கழுத்து வலித்திரு் கண்கள் கசிய
விழித்திர வெல்லாம் வியர்த்து வரைந்தார்
எழுத்தினது வேற்றுமையால் ஏதும் படித்தல்
ஒழித்தனர் நேயர்கள் ஒன்றும் அறியாது.
அழுத்திப் புலவர்சொல் ஆழ்ந்த கருத்தும்
இழைத்தநல் வேளைக்கு ் இழுக்கோ கணினி
பிழைத்தலறக் காக்குமோர் பெற்றிப் பராபரமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.