இன்ப விடுதலை
நினைத்த இடத்தில் இருப்பு--- கண்படும்
நீலவான் எங்கும் பறப்பு,
கனத்த மழைவந்து காடெங்கும் நீரானால்
காண்பாயோ ஓய்விடம் வெண்புறாவே!
இரையினைத் தேடி அலுத்தல் ---பின்யானும்
இட்டபச் சைப்பய றுகத்தல்,
குறையும் உனக்கில்லை கூடவந் தென்னுடன்
கொஞ்சிக் கிடந்திடு வெண்புறாவே!
கறிக்குழம் புண்டிடும் மாந்தன் --- அவன்
கண்ணியின் பக்கலில் மேய்ந்தாய்!
வெறிக்கிரை ஆகிநீ வெந்தணல் வீழுமுன்
வேண்டினேன் வந்திடு வெண்புறாவே!
குடித்தனம் செய்திடு கின்றாய் --- சிறு
குஞ்சுகள் கொண்டவன் ஒன்றாய்! --- உன்
நெஞ்சினை நானறி வேன்உன்
குடிக்கிடம் இங்குண்டு வெண்புறாவே!
பெயலும் ஒழிந்தபிதுடித்திடும் ன் சோலை --- எங்கும்
தென்றல் நறுமண மாலை --- வர,
அயலிலோர் பெண்ணொடு வைகுதல் ஆகாதென்
ஆய்ந்துணர்ந் திட்டாயோ வெண்புறாவே!
என்னென்ன கிட்டினும் என்ன -- ஓர்
இன்ப விடுதலை அன்ன,
பொன்னில்லை பொங்கும் பொலிசெல்வம் ஒன்றில்லை
போடியென் றார்த்தாயோ வெண்புறாவே!
_________________
_________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.