வனமல்லியே
(The substance for this poem came from another writer Mdm P.P.)
தாமே இருகால் நிற்க---முந்
தானை பிடித்திழுத்தாள்;
மூணு முடிபோட் டாளோ---இவள்
முழுஉரி மை பெறவே?
வீணே நிறுத்திவிட் டாளே--- அழகு
வீச்சில் சிரிப்பவளாம்!
நாணா தருகழைக் கின்றாள்-- அடாது!
நலமோ அவள்செயலே!!
ஆகுமா துணிச்சல் இதுவே-- இது
அடாவடி அன்றிவேறோ?
மாகவின் சேலையும் இதுவே --- என்
மன்னர் விழை பரிசே!!
நோகமுன் கவ்விடு கின்றாய் ---- அழ
காசை வனமல்லியே;
ஏகிடும் நானுனை மறவேன் ---- என்
இன்மனம் கவர்ந்தவளே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.