கரும்பு பற்றிச் சங்க இலக்கியத்தில் காணப்படும் குறிப்புகளை உணர்வுகள் களத்தில் ஓர் இடுகையில் எழுதியுள்ளேன்.
கரும்பு ஆலைகளும் அப்போது தமிழ் நாட்டிலிருந்தமை தெளிவு.
திருக்குறளும் கரும்பைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டுள்ளது:
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
மணிமேகலையிலும்:
காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக்கொடி வல்லியும் கரும்பும்் நடுமின்!
என வரும் ( 1: 46-47 : விழாவறை காதை)
சர்க்கரை, வெல்லம், சீனி, கருப்பட்டி. கற்கண்டு, பனங்கற்கண்டு, எனத் தமிழில் பல சொற்களிருப்பது தமிழின் சொல்வளத்தைக் காட்டுவதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.