ஞாபகம் என்ற சொல் எங்ஙனம் பிறந்தது என்பதை ஆய்வோம்.
தமிழில் ந என்பது ஞ என்று திரியும்.
எடுத்துக்காட்டு:
நயம் > ஞயம்.
"ஞயம்பட உரை" (ஒளவையார்).
மலையாள மொழியில் ந எழுத்து ஞ என்று திரியும்.
நான் (தமிழ்) - ஞான் (மலையாளம்)
நங்கள் (நம்+கள்) - ஞங்ஙள் (ம்)
நங்கள் என்ற வடிவம் தமிழில் வழக்கிறந்துவிட்டது.
இவ்விதிகளைப் பின்பற்றி :
ஞாபகம் முன் நாபகம் என்றிருந்திருக்க வேண்டுமென்பதை யறிந்துகொள்ளலாம்.
வகரம் பகரமாகத் திரியும்.
ஒழிவு - ஒழிபு.
வசந்தம் - பசந்த் (வட இந்திய மொழிகளில்)
கோவம் - கோபம்.
தாவம் - தாபம். (தவி+அம்= தாவம், வழக்கிறந்தது).
கோவிந்தன் - கோபிந்த் ( வ.இ. மொழிகளில்)
வ - ப திரிபு தமிழிலும் பிறமொழிகளிலும் பெரும்பான்மையானது. ( )
இவ்விதியைக்கொண்டு, நாபகம் என்பதன் முன்வடிவம் நாவகம் என்று தெரிந்துகொள்ளலாம்.
நாவு+அகம் = நாவகம்.
ஒருத்திக்கு ஒன்று ஞாபகம் இருந்தால், அது அவள் நாவகத்திருக்கும். அதாவது மனத்தில் இருப்பது நாவில் வரும். மனத்திலிருப்பதை நாவில் வரவழைத்து அளந்தறியலாம். (இக்காலத்தில் நாவிற்கு ஈடாக எழுதச்சொல்லி அறிந்துகொள்ளலாம். ஓலைச்சுவடிக் காலத்தில், அதற்கு முன்பு எவ்வாறு என்று சிந்திக்கவும். )
நாவகம் = நாவிலும் அகத்திலும் என்றும் பொருள்கொள்ளலாம். எல்லாவற்றையும் நானே சொல்லவேண்டியதில்லை.
ஞாபகம் என்பது தமிழ்ச்சொல் என்பது இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும்.
தமிழனே, நாம் உரையாடியதையும் உரையாடாமல் விட்டதையும் சிந்தித்தறிவாயாக.

அருமை
பதிலளிநீக்கு/
நாவு+அகம் = நாவகம்.
ஒருத்திக்கு ஒன்று ஞாபகம் இருந்தால், அது அவள் நாவத்திருக்கும். அதாவது மனத்தில் இருப்பது நாவில் வரும். மனத்திலிருப்பதை நாவில் வரவழைத்து அளந்தறியலாம். (இக்காலத்தில் நாவிற்கு ஈடாக எழுதச்சொல்லி அறிந்துகொள்ளலாம். ஓலைச்சுவடிக் காலத்தில், அதற்கு முன்பு எவ்வாறு என்று சிந்திக்கவும். )
நாவகம் = நாவிலும் அகத்திலும் என்றும் பொருள்கொள்ளலாம். எல்லாவற்றையும் நானே சொல்லவேண்டியதில்லை. /
கொங்குத்தமிழ் இப்படி சொல்வதுண்டு
நாயம் - பேச்சு ( அவன் பேச்சு யாருக்கு வேணும் - அவன் நாயம் யாருக்கு வேணும், அங்க என்னடா பேச்சு - அங்க என்னடா நாயம் )
நா - நாக்கு
நா பேசுவது நாயம்
இது நியாயம் என்னும் சொல்லிருந்து பிறந்தது என்று சொல்ல இயலாது
நாவக விளக்கம் மிக அருமை.
பதிலளிநீக்குதெரிந்த பெயருக்கு தெரியாத விளக்கம் தந்தமைக்கு நன்றி சிவமாலா.
பதிலளிநீக்குashwinji
www.vedantavaibhavam.blogspot.com