Pages

திங்கள், 8 ஜூன், 2009

மறவாமல் வந்துவிட்ட காதலன்

நீதான் அவனையே நினைந்து
வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருந்தாய்.
வேதனையோ உன் உளந்தனிலே!
விரைவு சில வேளைகளில், ஆனால்
தளர்வும் மெதுநடையும் பற்பல சமயங்களில்!
அலையாய் வந்து
கரையை முத்தமிட்டவன்,
உகந்து உன்னில் பெருகிட
மறந்த நாட்களும் பற்பலவே!
காத்திருந்து கண் பூத்துவிட்டதைச்
சேர்த்துவைத்த கணக்கும் வீண்போகவில்லை,
இன்றவன் உருகிப் பெருகி
இங்கேயே வந்துவிட்டான்!
எத்தனை சிறிய இன்ப அலைகள்
உன் மேனியில் வந்து பாய்கின்றன,
கடற்காதலன் உன்னைக்கை விடவில்லை,
உடனினி இருந்துவிட்டால்
இடர் இனி உனக்கில்லை, நீ வாழ்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.