நானுமெண் கணிதம் பார்த்து
நாட்பலன் உரைப்பேன் நாளை
மானிடர்க் கெல்லாம் துன்பம்
மாறிடும் மகிழ்வு தோன்றும்!
ஏனது நடக்கும் என்றீர்?
இருபதும் ஒன்றும் கூட்டி.
மேனிலை ஆண்டும் சேர்க்க
மீளுமெண் ஐந்தாம் காண்க!
இரண்டா யிரத்தின் ஒன்பான்
இனிதாகும் ஆண்டில் நாளில்
இருபத்தில் பதவி ஏற்பார்
இரும்பெயர் ஓபா மாவே!
ஒருபத்தில் பாதி என்றால்
உயர்வெலாம் கூடும் என்பேன்!
உருவத்தில் உயர்ந்தாற் போல
ஓங்கிடும் அன்னார் ஆட்சி!!
என்கணக்கு இதுவே ஆகும்.
இனிவரும் காலம் காண்போம்....
பொங்கலுண்(ட) பின்னே வந்து
புதுக்கணக் கிங்கே சொன்னால்
பங்கமாய்ப் ் போகா தன்றோ?
பைந்தமிழ் மக்காள்! எங்கும்
பொங்குக பொங்கல் இன்பம்.
புதுப்பொலி வெங்கும் தங்கும்!
வணக்கம்,
பதிலளிநீக்குஉங்கள் எழுத்துக்களைப்படிக்க நேர்ந்தது. உங்களுடன் தொடர்பு கொண்டு, தமிழர் வரலாறு தொடர்பான ஒரு திட்டம் பற்றி பேசவேண்டும்.
தயவு செய்து, amalasingh (at) gmail (dot) com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.