(இன்னிசை வெண்பா)
விரும்பின் எதையும் படிக்கலாம் இன்றேல்
வெறும்பூவைச் சூட மறுக்கலாம் அஃதொப்ப,
உள்ளம் விழையாத எம்மொழியும் வேண்டாமே,
கொள்ளவே தக்கதைக் கொள்.
ஒரு கருத்துக்கள நண்பருக்கு எழுதியது:
(நேரிசை வெண்பா.)
ஆரூர்ப் பெயர்மாண்பீர் அண்மித்தீர் இத்திரியை
வேறூரில் வேலைமிக் கென்னவோ --- நேரிழப்பு?
மீண்டுமோர் சுற்று மிகக்கூர்ந்து கற்றுயர்ந்து்
தாண்டித் தடைதகர்ப் போம்.
எழுதித் தொடருங்கள் எம்மால் இயன்ற
பொழுதெல்லாம் இங்கு புகுந்து --- பழுதின்றிப்
பூக்கள் மணமொக்கப் பொன்பொலியச் சீர்செய்தே
ஆக்கிடப் பாவின் பணி.
அன்புடையீர் உங்கள் கருத்துகளுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குதமிழும் நானும் என்னும் தலைப்பில் உங்கள் தமிழ்ப்பணிகளைப் பற்றி அரைமணிநேரம் இணைய வழிக்கூட்டமொன்றில் உரையாற்ற வேண்டும். இது குறித்துப் பேச உங்களின் பேசி எண்ணைத் தெரிவியுங்க்ள. என் எண் 9884481652. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்