Pages

சனி, 11 அக்டோபர், 2008

வெண்பாக்கள்

தேனூறும் வெண்பா தெளிந்த செழுந்தமிழில்
நானூறு தந்திடுவேன் நன்றாக --- காணூறும்
ஆன்பால் கறந்தே அதனோடு பாகுபருப்
பானயிவை யாவும் கலந்து!!

வருகவந் தென்னோடு வாகாய் வடித்துத்
தருக திரியிதனில் தண்மை --- பெருகிவரும்
நல்ல தமிழ்வெண்பா நாளும் மகிழ்ந்திடுவோம்
வெல்க உலகில் தமிழ்.

1 கருத்து:

  1. வியந்து போகிறேன் தோழி !

    பாரதி பெண்ணுருவம்கொண்டு பிறந்துவிட்டானோ ?

    பதிலளிநீக்கு

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.